Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளியில் கலிலியோ கலிலி பிறந்த தினம்.

பிப்ரவரி 16, 2023 04:15

கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே உள்ள பாலஅருணாசலபுரம், சாதனா வித்யாலயா பள்ளியில் கலிலியோ கலிலி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தொலை நோக்கியை வைத்து அதன் பயன்பாடு எவ்வாறு என்பதை மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

அனைத்து மாணவர்களும் தொலைநோக்கி மூலம் எவ்வாறு காண்பது பற்றியும், அதன் பயனையும்  நேரடியாக கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு முதல்வர் மயில் கண்ணு ரமேஷ் தலைமை தாங்கினார், தாளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

ஆசிரியை அன்பரசி அறிவியல் கண்டுபிடிப்புக்களில்  மகத்தான ஒரு கண்டுபிடிப்பு என்றால் அது தொலைநோக்கி என்பது மிகையாகாது. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர், தொலைநோக்கியை வானியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய முதன்மையானவர் கலிலியோ கலிலி என்று கூறினார். 


நிறை கொண்ட பொருட்களை ஒரே நேரத்தில் புவியை நோக்கி விழும்போது அதிக எடை கொண்ட பொருளே முதலில் வரும் என்றுமூன்றாம் நூற்றாண்டில்  அரிஸ்டாட்டில் அவர்கள் கூறிய கருத்து தவறு என நிறுபித்தவர் கலிலியோ கலிலி என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். 

அறிவியல் ஆசிரியை மகேஸ்வரி புவியை மையமாக கொண்டு கோள்கள் இயங்குகின்றன என்ற கூற்றையும் பொய்யாக்கி சூரியனை மையமாக கொண்டு இயங்குகின்றன என்பதை உலகறிய செய்தவர் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மதத்திற்கு எதிரானவை என்று கூறிய காலகட்டத்தில் தன்னம்பிக்கையுடன் அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தினார் கலிலியோ கலிலி என பேசினார் .  மேலும் ஆசிரியர் சௌமியா, சண்முகப்பிரியா, விழா ஏற்பாட்டினை செய்தனர்.

தலைப்புச்செய்திகள்