Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விளையாட்டில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெற முதல்வர் தீவிர முயற்சி

பிப்ரவரி 16, 2023 04:35

விளையாட்டில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெற முதல்வர் மு க ஸ்டாலின் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி துவக்க விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா  எம்எல்ஏ பெருமிதம்.

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்காண கபடி போட்டி மற்றும் கூடைப்பந்து போட்டிகள் சங்கரன்கோவில் அரசு மகளிர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மகளிர் கபடி அணிக்கான போட்டி துவங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா , ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன்,உடற்கல்வி இயக்குனர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.

இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற கபடி போட்டியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்து பேசியதாவது, இந்தியாவில் விளையாட்டில் தமிழகம் முதலிடம் பிடித்த தமிழக முதல்வர் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார்.

அதற்காக தற்போது திறமை வாய்ந்த சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளார் .மேலும் முதல்வர் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக முழுவதும் 14 விளையாட்டுகள் அடங்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் மாவட்ட ,மாநில அளவிலான வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதமும், மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற ஊக்கத் தொகையும் வழங்க உள்ளார்.

அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தியும் விளையாட்டில் கவனம் செலுத்தி பல தகுதிகளை பெற்று அரசு பணிக்கு சேர அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.

மேலும் இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவை ஒளியேற்ற கூடியவர்கள் என்பதால் அனைவரும் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என பேசினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, மகேஸ்வரி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யதுஅலி,மின்வாரிய தொமுச திட்டச் செயலாளர் மகாராஜன் ,நகர அவைத் தலைவர் முப்பிடாதி,நகர துணைசெயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன் ,முத்துக்குமார் சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ் ,மாணவர் அணி கார்த்தி, உதயகுமார், அப்பாஸ்அலி மற்றும் கேபிள் கணேசன், வேல்முருகன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தாமைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்