Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அரசு செயலாளர் திடீர் ஆய்வு

பிப்ரவரி 17, 2023 12:46

நாமக்கல் : -  தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி கமிஷனர் மற்றும் அரசுச் செயலாளர் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின், வேளாண்மை உற்பத்தி கமிஷனர் மற்றும் அரசுச் செயலாளர் சமயமூர்த்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, நாமக்கல் மாவட்ட விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அரசுச் செயலாளர் சமயமூர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

 
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருட்களின் வரத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் ஏலத்தில் பங்கேற்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சேமிப்பு கிடங்குகளை அதிக அளவில் பயன்படுத்திடவும், ஏலத்தினை முழுவதும் எலக்ட்ரானிக் முறையில், தேசிய வேளாண் சந்தையுடன் ஆன்லைன் மூலம் இணைத்து நடத்திடவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

விற்பனைக் கூடத்திற்கு வருகை புரிந்த விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தாரிடம் கலந்துரையாடிய அரசுச் செயலாளர் சமயமூர்த்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, மாவட்ட கலெக்டரின் வேளாண்மைத்துறை நேர்முக உதவியாளர் முருகன் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) நாசர், நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ், விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் லோகாம்பாள் உள்ளிட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்