Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூதாட்டியை விரட்டியடித்த பள்ளிபாளையம் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்: எஸ்.பி., உத்தரவு

பிப்ரவரி 17, 2023 01:15

போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த மூதாட்டியை விரட்டி அடித்த போலீஸ் ஏட்டுவை மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த கண்டிபுதூரைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (80). அவருக்கு, 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் இறந்துபோனதால், மருமகள்கள் ஆதரவ
ஆதரவில் அவர் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், சில ஆண்டுகளாக, எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில் தனியாக இருந்து வரும் மூதாட்டி, அவ்வப்போது கிடைக்கும் உணவைஉட்கொண்டு வசித்து வந்தார். தனிமையில் விடப்பட்ட மூதாட்டி, தனக்கு ஆதரவு கேட்டு, ஏற்கனவே பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 13ம் தேதி மதியம், பள்ளிபாளையம் போலீசில் மீண்டும் புகார் கொடுக்க மூதாட்டி அய்யம்மாளிடம் புகாரை வாங்காமல், அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

இதனால் அய்யம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர், மூதாட்டியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துச் சென்று, மூதாட்டியை வெளியே அனுப்பி வைத்தார். இது சம்மந்தமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

எவ்வித ஆதரவும் இன்றி, சாப்பாட்டுக்கு வழி செய்யக்கேட்டு, போலீஸ் ஸ்டேசன் சென்ற மூதாட்டியை, இரக்கமின்றி நடத்திய போலீசின் நடவடிக்கை சமூக ஆர்வலர்களை டும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மூதாட்டியை விரட்டியடித்த சமந்தப்பட்ட போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட எஸ்.பிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையொட்டி, பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்ற மூதாட்டியை, விரட்டி அடித்த போலீஸ் ஏட்டு யுவராஜை, நாமக்கல் எஸ்.பி., கலைச்செல்வன் சஸ்பெண்ட்சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்