Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசுமை வீடு திட்ட வீடுகளுக்கு முன் பிரதமர் படம் வைக்க பா.ஜ.க. கோரிக்கை

பிப்ரவரி 17, 2023 01:37

நாமக்கல் : பசுமை வீடு திட்ட வீடுகளுக்கு முன் பிரதமர் படம் வைக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது.

பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ள பயனாளிகள் வீடுகளுக்கு முன்பு பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று மோகனூர் ஒன்றிய பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோகனூர் கிழக்கு மண்டல் பா.ஜ.க. செயற்குழு கூட்டம், மோகனூரில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், ராஜா, பொருளாளர் தாமோதரன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம், எருமப்பட்டி கவுன்சிலர் துரைராஜ், மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மோகனூர் டவுன் பஞ்சாயத்திற்கு சொந்தமான கடைகளை பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட வேண்டும். கொமரியாளையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் உடனடியாக தடுக்க வேண்டும். எதிர்கால விவசாயம் மற்றும் குடிநீர் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

மோகனூர் ஆண்கள் மே ல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வழித்தடம் வழியாக அதிகமான அளவில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும். மோகனூர் பகுதியில் ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதை தடுத்து சுத்தப்படுத்த வேண்டும்.

பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பசுமை வீடு கட்டிய பயனாளிகள் வீட்டிற்கு ன்புறம், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும்.

மோகனூரில் உள்ள வேலூர் மெயின் ரோட்டை தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுகிறது. எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மோகனூரில் உள்ள நாமக்கல் ரோடு பகுதியில் உள்ள ஓட்டல்களில் கடைக்கு வெளியே ரோட்டோரம் சமையில் செய்வதால், அதிக புகை மூட்டம் ஏற்பட்டு, ரோட்டில் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். அதை தடுக்க வேண்டும். கணவாய்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். தமிழகத்தில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது அரசின் மானிய உதவி பெற்று கட்டப்பட்ட வீடுகளில் எல்லாம் முன்பகுதியில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு இருந்தது. அப்படி படத்தை வைத்தால் தான் அதிகாரிகள் உரிய மானிய தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கி வந்தார்கள். அதே போல் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கும் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்