Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஶ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் எடுத்த 'அறம்புதிது' குறும்படத்திற்கு விருது

பிப்ரவரி 17, 2023 02:09

ராசிபுரம் :- தாய்தமிழ் அகாடமி சார்பாக"உலக சாதனை புத்தகம்"விருதுகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொரானா காலத்தில் மாணவர்கள் மொபைலினால் அடைந்த துன்பத்தைச் சித்தரிக்கும் விதத்தில், "அறம் புதிது" என்னும் குறும்படம் இயக்கப்பட்டது.

அதில் மாணவர்கள் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்த, குருக்கபுரம் ஶ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியில் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களான K.தருண், K.கௌதம் ஆகியோரைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளியின் முதல்வர் G. சங்கீதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்