Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 முத்தாயம்மாள் கல்லூரியில் இலவச பல் பரிசோதனை முகாம்

பிப்ரவரி 18, 2023 11:44

ராசிபுரம் : முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சுபிக்ஷம்
பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
உயிர் வேதியியல் துறை மற்றும் ராசிபுரம் சுபிக்ஷம் பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ஒரு நாள் இலவச பல் மருத்துவ முகமானது காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்ட வேலம் பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. 


இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் சுபிக்ஷம் பல் மருத்துவமனையின்
பல் மருத்துவர் டி.ஆனந்தி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் கலந்து கொண்டு, சுமார்
60-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச பல் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளை வழங்கினார்.


இம்முகாமை உயிர் வேதியியல் துறை பேராசிரியைகள், மற்றும் மாணவ, மாணவியர்கள்
சிறப்பாக வழி நடத்தினர்.

தலைப்புச்செய்திகள்