Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி  நாக் ஏ -பிளஸ் பெற்று சாதனை

பிப்ரவரி 18, 2023 11:48

நாமக்கல் :- நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் சுற்றிலேயே தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவைக்குழுவின் (நாக்) 4.00 -
கிற்கு 3.31 புள்ளிகளுடன் நாக் ஏ பிளஸ் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது.
8 மற்றும் 9 பிப்ரவரி 2023 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் - பட்டியாலா – பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் புல முதன்மையர் அசோக்குமார் மாலிக் தலைமையில்
உத்திரப்பிரதேச மாநிலம் - கோரக்பூர் - தீனதயாள் உபாத்யாய கோரக்பூர்
பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைப் பேராசிரியர் அஜய் கே. குப்தா மற்றும் மகாராஷ்டிர மாநிலம் - நாக்பூர் - ஆர். எஸ். முண்ட்லே கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தியா நாயர் ஆகிய நாக் குழுவினர் கல்லூரிக்கு வருகை புரிந்தனர்.


கல்லூரியின் சாதனைகளை இணைய வழியில் சமர்ப்பித்திருந்ததை நேரில்
பார்வையிட்டனர். குறிப்பாக கற்பித்தலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், சமூகம்
சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகள், நிர்வாக அமைப்பு, நிறுவன மதிப்பீடு, கல்லூரி,
பேராசிரியப் பெருமக்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகள்,கல்லூரியில் பின்பற்றி வரும் சிறப்பான நடைமுறைகள், பல்கலைக்கழகத் தேர்வுகளில் மாணவியரின் சாதனைகள், கல்லூரி வளர்ச்சியில் முன்னாள் மாணவியர் பங்கு, கல்லூரி சேவை
அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாயப் பணிகள் மற்றும் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். குறிப்பாக, நாக் குழுவினர் சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக விளங்கும் டிரினிடி கல்விக் குழுமம் குறித்து பெருமையுடன் பாராட்டினர்.


ஏ பிளஸ் புள்ளியுடன் நாக் அங்கீகாரம் பெற்றமைக்கான டிரினிடி கல்லூரிப்
பேராசிரியப் பெருமக்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவியருக்கான
பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி
நிர்வாகத்தினர் கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டினர்.

இந்நிகழ்வில் கல்லூரித் தலைவர் பி. எஸ். கே. செங்கோடன், செயலர் கே. நல்லுசாமி, செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயக்குநர் உயர்கல்வி அரசுபரமேசுவரன், உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் என்.இளமதி, நிர்வாக அலுவல என்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்