Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா கல்லூரியில் ஹைடெக் பேஷன் லேப் திறப்பு விழா

பிப்ரவரி 18, 2023 11:59

நாமக்கல் : சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துகிலியியல்
மற்றும் நவீன ஆடை வடிவமைப்பு துறையில் மாணவிகளின் வேலைவாய்ப்பு சதவீதம்
உயர்வதற்காகவும், மாணவிகள் சுய தொழில் பெறுவதற்காகவும், மாணவிகள்
தன்னம்பிக்கை பெறுவதற்காகவும் ஹைடெக் பேஷன் லேப் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவினை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர். மு.கருணாநிதி தலைமை தாங்கி ஹைடெக் பேஷன் லேபினை திறந்து வைத்தார்.

நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர். மு.கருணாநிதி பேசுகையில், இந்த ஹைடெக் பேஷன் லேபினை விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை (ஃபேஷன் டெக்னாலஜி) பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் திருப்பூர், பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களில் இருப்பது போன்ற நவீன வடிவமைப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவிகள் தங்கள் எதிர்காலத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் சென்று பணிபுரியவும் மேலும் மாணவிகள் தாங்களாகவே சுயமாக சுய தொழில் முனைவோராக செயல்படவும் இந்த ஹைடெக் பேஷன் லேப் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


திறப்பு விழாவில், சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அட்மிஷன் இயக்குனர் டாக்டர் சி.கே.ரவிசங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி இயக்குனர் டாக்டர் குமாரவேல், முதல்வர் டாக்டர் பி.டி.சுரேஷ்குமார், சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், டீன் டாக்டர் ஜெயக்குமார், முதல்வர்கள் டாக்டர் ராஜேந்திரன், டாக்டர் ஜோதி நாயர், டாக்டர் ஆனந்தகுமார், டாக்டர் கிருபா, டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் அழகு சுந்தரம் மற்றும் பிற துறைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழா ஏற்பாடுகளை இத்துறையின் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்