Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியா் கதிரவன் காலமானார் அமைச்சர்கள் இறுதி மரியாதை செலுத்தினா்

பிப்ரவரி 18, 2023 02:30

நாமக்கல் :- ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியா் கதிரவன் திடீர் மாரடைப்பால் காலமானார். நாமக்கல் அருகே அவரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அமைச்சர்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரத்தில் 3.6.1970 ஆசிரியர் சின்னத்தம்பியின் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கதிரவன் (52). இவர் பழையபாளைம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பின்னர் பட்டப்படிப்பு முடித்து, கடந்த 12.09.1996 அன்று தமிழக அரசில் வேளாண் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி துணை  ஆட்சியராக கடந்த 25.01.2002ல் தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆகிய இடங்களில் வருவாய் கோட்டாட்சியராக பணியற்றினார். 


பின்னர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 27.12.2013ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அதையொட்டி, சேலம் ஆவின் பொது மேலாளராகவும், மதுரை மாநகராட்சி கமிஷனராகவும், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து சேலம் மேக்னசைட் பொது மேலாளராக பணிபுரிந்த அவர் தற்போது சென்னையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்ட்பணிகள் இயக்குனராக பணியாற்றி வந்தார்.


நேற்று 17ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமாணார்.

அவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் 2 பெண் குழந்தையும் உள்ளனர். 
நேற்று சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது உடல் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஷஸ்குமார்  உள்ளிட்டோர் தமிழக அரசின் சார்பில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மாலை 6 மணியளவில் காந்திபுரம் மயானத்தில் அவது உடல் தகனம் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்