Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 20, 2023 04:17

திருச்செங்கோடு : கோவை காந்திபுரம்  மேம்பால தூண்களில் வரையப்பட்ட சிலப்பதிகார ஓவியங்கள் குறிப்பிட்ட சமுதாயத்தினரை  (கம்மாளர் என்கிற  விஸ்வகர்மா)  இழிவுபடுத்தும் நோக்கில் வரைந்ததை கண்டித்தும், அதனை எதிர்த்து இளைஞர் வேல்முருகன் தார் ஊத்தியதற்கு பொய்யான வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்தும், வேல்முருகணை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் 30 க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு கைவினைஞர் முன்னேற்ற கட்சியின் சார்பில் 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோவை காந்திபுரம் மேம்பாலத்தின்  புராண ஓவியங்கள் வரையப்பட்டதில் நான்கு தூண்களில் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கம்மாளர் என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதை வன்மையாக கண்டித்தும், அதன் மீது தார் ஊற்றி ஓவியங்களை அளித்த வேல்முருகன் என்ற இளைஞர் மீது காவல்துறை பொய்யான வழக்குப்பதிவு செய்து ஜாமினில் வெளிவராத படி கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை கண்டித்தும், வேல்முருகனை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கைவினைஞர் முன்னேற்ற கட்சியில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அமைப்பாளர் உமாபதி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் மகேந்திரன், மாநில மகளிர் அணி ஜனனி, மண்டல தலைவர் எம் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்