Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் குறைதீர் கூட்டத்தில் காதொலிக் கருவி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வழங்கினார்

பிப்ரவரி 21, 2023 03:20

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 272 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

இவற்றில் காதொலிக் கருவி கோரி மனு அளித்த 2  மாற்றுத்திறனாளிகளின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,800/- வீதம் மொத்தம்  ரூ.5,600/- மதிப்பில் 2 காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மு.மணிமேகலை, அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்