Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோட்டில் மலைக்காவலர் கோயில் புரனமைப்பு பணிகள் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு

பிப்ரவரி 21, 2023 05:52

திருச்செங்கோடு : திருச்செங்கோடு வேலூர் சாலையில் அமைந்துள்ள சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக்காவலர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புகழ்பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக் கோவிலை காத்து அருளிய ஸ்ரீ நெல்லையப்ப சுவாமி ஸ்ரீ வேமண்ணா ஸ்வாமி திருவுருவங்கள் உள்ளது.

கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் மரக்கதவில் 1895 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது தவிர இந்த கோவில் எந்தாண்டு கட்டப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இல்லை. 


இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ. 26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புரனமைப்பு பணிகளை செய்து குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவிலில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க அரசு தயாராக உள்ளதாகவும், காலியாக உள்ள இடங்களில் பூங்கா அமைத்து, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கினார்.

சுமார்  150 ஆண்டுகளுக்கு பின்பு இக்கோவில் குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்த அறநிலைத்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவியாளர் ரமணி காந்தன் உள்ளிட்ட பலர் இருந்தனா்.

தலைப்புச்செய்திகள்