Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் தி நவோதயா அகாடமி பள்ளியில்  மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி

பிப்ரவரி 21, 2023 05:56

நாமக்கல் : நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் அனைத்து மாணவ மாணவியரின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


அனைத்து மாணவர்களின் முழு பங்கேற்பு எனும் குறிக்கோளோடு 16.02.2023 அன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கும் 18.02.2023 அன்று 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கும் தனித்தனியே கலை விழா நடத்தப்பட்டது. இக்கலை விழாவில் பாடல், ஆடல், மேலைநாட்டு நடனம், கிராமிய நடனம், நாடகம், இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற அனைத்து விதமான கலைநிகழ்ச்சிகளும் மாணவர்களால் நடத்தப்பட்டன.


இவ்விழாவின் முக்கியம்சம் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் தனித்தன்மையை பாராட்டும் விதமாகவும் அவர்களிடையே காணப்படும் தனிப்பண்புகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வெவ்வேறு துறைகளில் சாதித்த தி நவோதயா அகாடமியின் முன்னாள் மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தினர்.

தலைப்புச்செய்திகள்