Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில்  உலக மகளிர் தின விழா சிறப்பு பட்டிமன்றம்   

பிப்ரவரி 27, 2023 12:33

திருச்செங்கோடு : திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா தொலைக்காட்சி , கோடை பண்பலை 100.5 இணைந்து உலக மகளிர் தின விழா சிறப்பு பட்டிமன்றம்   நடைபெற்றது.  இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளார் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணநிதி தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் முனைவர் பி.பேபி ஷகிலா முன்னிலை வகித்தார். 


பட்டிமன்றத்தின்  நடுவராக சன் டிவி மற்றும் விஜய் டிவி புகழ் பட்டிமன்றப் பேச்சாளர், இலக்கிய ஆர்வலர் அன்னலட்சுமி கலந்துகொண்டு சிறப்பித்தார்.  பட்டிமன்றத்தின் தலைப்பு *இன்றைய சூழலில் பெண் சுதந்திரம் வளர்கிறதா? தளர்கிறதா? வளர்கிறது என்ற அணியில் என்ற செ.வை.வினோத், ச.சௌமியா, க.சிந்துஜா, தீபிகா ஆகியோரும், தளர்கிறது என்ற அணியில் மு.மெளனிகா, செ.உமா மகேஸ்வரி, ர.புவனேஸ்வரி, யு.நவமதி ஆகிய மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் இந்த பட்டிமன்ற விழாவில் சுமார் 3000 மாணவிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், கல்வி இயக்குனர் டாக்டர் குமரவேல்,அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், தேர்வாணையாளர் டாக்டர் பத்மநாபன், துறைத் தலைவர் டாக்டர் ம.கவிதா பேராசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டிமன்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் த ஸ்ரீதர்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்