Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யோகா சாதனை சகோதரிகளுக்கு இளம் சிறந்த மகளிர் விருது சான்று

மார்ச் 14, 2023 04:25

யோகா சாதனை சகோதரிகளுக்கு இளம் சிறந்த மகளிர் விருது சான்று- 2023...// சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை  சார்பாக " பாலின சமத்துவத்திற்கான புதுமை & தொழில்நுட்பம்" என்ற தலைப்பில்  12.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு துறைகளில் சாதித்த மகளிருக்கு "விவாஹா-2023" விருதுகள் வழங்கும் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்,  இதில் இரவணசமுத்திரத்தை சார்ந்த,குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தில் பயிலும்   சகோதரிகள் யோகா நட்சத்திரம் மிஸ்பா நூருல் ஹபிபா,ஷாஜிதா ஜைனப் ஆகியோருக்கு சிறந்த  இளம் மகளிர் விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.

 கடந்த மூன்று வருடங்களாக பல துறைகளில் சாதனை புரிந்த மகளிரை தேர்ந்தெடுத்து திருநெல்வேலி தி சென்னை சில்க்ஸ் மற்றும் sri குமரன் தங்க மாளிகை நிறுவனங்கள் உலக மகளிர் தினத்தன்று கவுரவபடுத்தி விருதுகளை வழங்கி வருகிறது.

இதில் யோகாவில் ஆசிய அளவில் இருமுறை தங்கப்பதக்கம் மற்றும் குளோபல் தேசிய சாதனை சான்றிதழ், யுனிவர்சல் புக் ஆஃப் ரிக்கார்ட்டில் இடம் பெற்றும்  யோகா, ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் மட்டுமில்லாமல் இதன் மூலம் பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரத்தை சார்ந்த குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி யோகா நட்சத்திர விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா மற்றும் இதே பள்ளிகுழுமத்தில்  நான்காம் வகுப்பு பயிலும் மாணவி ஷாஜிதா ஜைனப் ஆகியோருக்கு சிறந்த இளம் மகளிர்க்கான விவாஹா விருது சான்றிதழ் - 2023 வழங்கப்பட்டது.

இவ்விருவரும் சகோதரிகள் ஆவர் மேலும் ஷாஜிதா ஜைனப் என்பவர் தன் அக்கா மிஸ்பா வை மிஞ்சும் அளவிற்கு தொடர்ந்து பல் வேறு சாதனைகள் மற்றும் சமூக விழிப்புணர்வுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, சதக்கத்துல்லா கல்லூரி பேராசிரியர் திரு.சவுந்திர மகாதேவன், அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் திரு.மதிவாணன். மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு & விழிப்புணர்வு கமிட்டி உறுப்பினர் திருமதி. லதா மதிவாணன்.ரங்கோலி கலை நிபுணர், பேச்சாளர் சொல்லரசி. சீதாபாரதி, நெல்லையின் தொன்மை பிரச்சாரகர் எழுத்தாளர் கிருஷி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து சாதித்த மகளிருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தி சென்னை சில்க்ஸ்,sri குமரன் தங்க மாளிகை நிறுவன  மேலாளர்கள்  மற்றும் டைவேல் டிஜிட்டல் விளம்பர பிரிவு செய்திருந்தார்கள் முடிவில் இந்நிறுவனங்களுக்கு மிஸ்பா &ஷாஜிதா குடும்பத்தினர் யோகா ஆசிரியர் குரு கண்ணன் ஆகியோர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்...

தலைப்புச்செய்திகள்