Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

மார்ச் 15, 2023 04:13

ராசிபுரம், ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி வளாகத்தில் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ‘ஹெர் ஸ்டோரிஸ்’ பதிப்பகத்தின் இணை நிறுவனரும், தொகுப்பாளருமான சமுதாய மற்றும் பெண்ணிய வரலாற்று எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் கலந்து கொண்டார்.

அவர்தம் உரையில் பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றியும், திறமையோடு செயல்பட வேண்டிய முறைகளும் அதற்கான உத்திகளைப் பற்றியும் விவரித்தார். ஒவ்வொரு நிலையிலும் பெண்கள் தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். பெண்களுக்கான வழிகாட்டி பெண்கள் மட்டுமே என்றார்.


விழாவில் கல்லூரியின் செயலாளர் முத்துவேல் ராமசுவாமி தலைமையுரையாற்றினார். இயக்குநர்-கல்வி முனைவர் இரா.செல்வகுமரன் வாழ்த்துரை வழங்கினார். மேலும் முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார், துணைமுதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லாபேபி, சமுதாய செயல்பாட்டுத் தலைவர் எம்.ராமமூர்த்தி மற்றும் மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முன்னதாக விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் நிவேதிதா லூயிஸ் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் இணைந்து பல்வகைக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

இதில் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், மைமிங், சிலம்பம், பாட்டு, பேச்சு, கவிதை, பட்டிமன்றம் மற்றும் விளம்பர உத்தி என 35 நிகழ்வுகள் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்