Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

மார்ச் 21, 2023 08:08

வாசுதேவநல்லூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தமிழக அரசியல் வருகையை பறைசாற்றும் விதமாக தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு என்று புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து முன் மாதிரி மாவட்டமாக உருவாக்கிட அயராது உழைக்கும் தென்காசி அ.ஆனந்தன் தலைமையில்  விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டார்கள்.

தென்காசி மாவட்ட இளைஞரணி விஜய் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கடேஷ்,தவிடு மாவட்ட பொருளாளர் மணிமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் கடையநல்லூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் விவேக், சங்கரண்கோவில்  விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள்  சதாசிவம், இரமேஷ் ஆகியோர் இணைந்தனர். இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்