Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரத்தி்ல் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 15 பயனாளிகள் கே.பி. இராமலிங்கம் அரசின்  உத்தரவு வழங்கினார்

மார்ச் 22, 2023 04:42

ராசிபுரம், வீடு வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் தாங்களாகவே வீடு கட்டிக் கொள்வதற்கான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு அரசு மானியம் ரூ. 2.10 இலட்சம் அவர்களது வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது.
இதன்படி,  இத்திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 பேருக்கு, ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.


இதையடுத்து, அந்த பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகளை, பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கே.பி. இராமலிங்கம் பயனாளிகளுக்கு வழங்கினார். 

பின்னா் டாக்டர் கே.பி. இராமலிங்கம் கூறும் போது, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு, அவர்கள் வீடுகள் கட்டிக் கொள்ள அவர்களது வங்கிக் கணக்கிற்கு அரசின் மானியமாக தலா ரூ. 2.10 இலட்சம்  வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் இத்தட்டமானது, கட்டிட அடித்தளம், லிண்டல், கான்கிரீட் தளம், அனைத்து வேலைகள் ஆகிய 4 பிரிவுகளிலும் வேலைகள் முடிக்கும்போது, பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு முறை வைத்து, மொத்தம் ரூ. 2.10 இலட்சம் அரசு மானியம் வரவு வைக்கப்படுகிறது.

இதனைக் கொண்டு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டப் பயனாளிகள் கான்கிரீட் தளத்துடன் சொந்த வீடுகளை கட்டிக் கொள்ள முடியும் என்ற சமூக பாதுகாப்பு மத்திய அரசின் திட்டத்தால் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது,  அத்தனூர் பாஜக கிளைத்தலைவர் முத்துசாமி உடன் இருந்தார்.

தலைப்புச்செய்திகள்