Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசனில் வேலைவாய்ப்பு முகாம்

மார்ச் 25, 2023 05:34

ராசிபுரம்,  ராசிபுரம் வநேட்ரா கல்வி குழுமத்தைச் சேர்ந்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசனில் சென்னையில் உள்ள நிசை எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஜப்பான்) நிறுவனத்தினரால் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிசை எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்(ஜப்பான்) நிறுவனத்தின் பொது மேலாளர் R..C..வெங்கடேஷ் மற்றும் மனித வளத்துறையின் செயல் அலுவலர் S.பாலமுருகன் ஆகியோர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவ, மாணவியரை வேலைக்குத் தேர்வு செய்ய வந்திருந்தனர். 


மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணினி துறையைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 120 பேர் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்-ஐ சேர்ந்த 10 பேர் மற்றும் பிற கல்லூரியிலிருந்து 5 மாணவ மாணவியர் மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களது இறுதி ஆண்டு படிப்பை முடித்த பின் வேலையில் சேர உள்ளனர். 


வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பணி நியமன ஆணைகளை நிசை எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்(ஜப்பான்) நிறுவனத்தின் பொது மேலாளர், உதவி பொறியாளர் மற்றும் இன்ஸ்டிடியூசனின் செயலாளர், முதல்வர் ஆகியோர் வழங்கினர்.

வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவ மாணவியா்களை கல்லூரியின் தாளாளர் கே.பி.இராமசுவாமி, செயலாளர் R..முத்துவேல், முதல்வர் Dr.R..மணி மற்றும் அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கேம்பஸ் இன்டர்வியூக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி S.சங்கர் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்