Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

மார்ச் 27, 2023 12:51

திருச்செங்கோடு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 14-வது ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ஆர்.சீனிவாசன், செயல் இயக்குனர் கவிதா சீனிவாசன், துணைத்தாளாளர் சச்சின் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

மேலும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கே. தியாகராஜா, கே.எஸ்.ஆர் கல்வி நிர்வாக இயக்குநர் வி மோகன், கலை அறிவியல் தன்னாட்சி) கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி.ராதாகிருஷ்ணன், மகளிர் கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறையின் இயக்குநர் முனைவர் து.குமரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


முதலாமாண்டு கணிதவியல் துறையைச் சார்ந்த மாணவி எஸ்.சிவசங்கரி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓசூர் மாவட்ட வன அலுவலர் கே.கார்த்திகேயனி கலந்து கொண்டு மாணவிகள் சமூகத்தில் எதிர்வரும் பிரச்சனைகளை மனவலிமையுடனும், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். 


இதில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 51 மாணவிகளுக்கும், தேசிய அளவில் குளிர்கால விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கும், தேசிய கேடட் கார்பஸ், தேசிய சேவை திட்டம் மாணவிகளுக்கும் விருது வழங்கப்பட்டது மேலும் சிறந்த நூலக பயன்பாட்டாளரான பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கும் விருது வழங்கப்பட்டது. இயற்பியல் துறையைச் சார்ந்த டாக்டர். ஒய் ஏ, சையது காதர் மற்றும் டாக்டர் வி. பி தேவராஜன், வேதியியல் துறையைச் சார்ந்த டாக்டர் கே. கந்தசாமி ஆகியோருக்கு சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளருக்கான விருது வழங்கப்பட்டது.


ஆங்கிலத்துறையைச் சார்ந்த மூன்றாமாண்டு மாணவி என் எஸ் ஸ்ருத்திகாவின் நூல் வெளியீடு செய்யப்பட்டது. இறுதியாக இரண்டாமாண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு துறையைச் சார்ந்த மாணவி ஜெ ஹர்சினி நன்றியுரை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்