Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆற்றில் கொட்டப்படும் கோழி கழிவுகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? 

ஏப்ரல் 04, 2023 06:58

மல்லசமுத்திரம், ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில், கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால், மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.


மல்லசமுத்திரம் அருகே உள்ள, ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் அப்பகுதியில் அருகில் உள்ள கோழிப்பண்ணையை சேர்ந்த உரிமையாளர்கள் மூட்டை மூட்டையாக, கோழி இறைச்சி கழிவுகளை கொட்டியுள்ளனர்.

இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இவ்வழியாக செல்லும் மாணவர்கள், மக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 


குறிப்பாக தற்சமயம், இந்த ஆற்றின் குறுக்கே பலமாதங்களாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. எனவே, இறைச்சி கழிவுகளின் துர்நாற்றத்தால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்டுமானத் துறையை சேர்ந்த அலுவலர்களும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமும், சுகாதார துறையும் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, இப்பகுதியில் நீண்ட வருடங்களாக தீர்க்க முடியாத சவாலாகவே இருந்து வருகிறது.

ஆகவே, மாவட்ட நிர்வாகமாவது தலையீடு செய்து, ஆற்றில் கோழி இறைச்சி கொட்டியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்தும், இனிமேல் ஆற்றில் கோழிஇறைச்சி கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்