Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் டேலி பிரைம் கணக்குப் பதிவியல் பயிற்சி முகாம்

ஏப்ரல் 08, 2023 12:53

நாமக்கல், நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புத்தாக்க
மையம், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகள் ஆகியவை இணைந்து “டேலி
பிரைம்” என்ற தலைப்பிலான கணக்குப்பதிவியல் பயிற்சி முகாமினை அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.


இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டம் - மோகனூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்ரீ கலைமகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் கே. முரளிதரன் தலைமையில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.எம். வம்சிதரன் மற்றும் பயிற்சியாளர்கள் பி. செல்வராணி, எம். சௌமியாதேவி ஆகியோர் கலந்து கொண்டு மாணவியருக்கு பயிற்சி அளித்தனர்.


இதில் ஒற்றைப்பதிவு, இரட்டைப்பதிவு கணக்கு முறைகள், சேவை மற்றும் சரக்கு வரி
கணக்கீடு, நிதி மேலாண்மை, வணிக மேலாண்மை, ஊழியர்களுக்கான சம்பளப்பட்டியல்
தயாரித்தல், இணையவழித் தரவுகள், ரொக்கம், பணமில்லா வங்கி பரிவர்த்தனை, நிதிப்
பகுப்பாய்வு, பற்று வரவு இருப்பாய்வு, வியாபார இலாப நட்டக்கணக்கு, இருப்பு
நிலைக்குறிப்பு போன்ற தலைப்புகளில் நேர்முக வகுப்புகள் மற்றும் செயல் முறை
வகுப்புகள் மூலம் பயிற்சிகளை அளித்தனர்.


இந்நிகழ்வில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர்.
லட்சுமிநாராயணன், இயக்குநர் - உயர்கல்வி அரசுபரமேசுவரன், துறைத்தலைவர்கள் ஆர்.
நவமணி, எம். சசிகலா உட்பட வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறைப்
பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.


ஓவ்வொரு வணிக நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான கணக்குப்பதிவியல் துறைகளுக்கு புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் போது டேலி மென்பொருள் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இதன் பொருட்டு இக்கல்லூரி மாணவியர் உடனடி வேலை வாய்ப்பினை பெறும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்