Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆண்டுவிழா விழா

ஏப்ரல் 08, 2023 12:58

நாமக்கல், சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கல்வியியல் கல்லூரிகளின் ஆண்டுவிழா நடைபெற்றது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளர் கிருபாநிதி, இயக்குனர் டாக்டர் நிவேதான கிருபாநிதி, கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் பா.அழகுசுந்தரம், புலமுதன்மையாளர் முனைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர், பேச்சாளர், கல்வியாளர் டாக்டர் தாமு கலந்து கொண்டார், அவர்தம் சிறப்புரையில் “மாணவிகள் எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும். அன்பினை அனைவரிடமும் செலுத்த வேண்டும். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். அன்னையைப் போல அன்பு செலுத்தும் தெய்வம் ஏதும் இல்லை; உங்கள் குறைகளை முதலில் அன்னையிடம் கூறி தவறாக இருப்பின் மன்னிப்பு கேளுங்கள் என்று மாணவிகளை ஒழுக்கப்படுத்தும் விதமாக உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்கள் ஆண்டறிக்கையை வாசித்தனர். இதில் கல்லூரி அளவில் தரவரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுப்பொருட்களும்
வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுமார் 2,500 -க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து
கொண்டனர்.


இவ்விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களையும் பரிசுக் கேடயங்களையும் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கினர். விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் எக்ஸ்கியூட்டிவ் ரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி தமிழ்செல்வன், வேலை வாய்ப்பு அதிகாரி அருண்பிரசாத், நிகழ்வு மேலாளர் த.ஸ்ரீதர்ராஜா மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்