Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் ஸ்ரீ பலப்பட்டறை மாரியம்மன் கோயில் சுற்றுச்சுவர் கட்டும் பணி: எம்எல்ஏ நேரில் ஆய்வு

ஏப்ரல் 10, 2023 05:19

நாமக்கல், நாமக்கல் ஸ்ரீ பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டுவது குறித்து, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினா் பெ.ராமலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பலப்பட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இது அனைத்த சமூகத்தினரும் வழிபாடு செய்யும் கோயிலாகும். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் துவங்கி ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறுவது சிறப்பு ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது கோயிலில் வடக்குப்புறத்தில் இருந்த காலி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கும்பாபிசேக விழா நடைபெற்றது.

பின்னர் தனியார் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், அந்த சுவர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
இதையொட்டி அரசு அதிகாரிகள் முன்னிலையில், கடந்த ஜன. 24ம் தேதி திருக்கோயிலின் வடக்குப்புற சுவர்இடிக்கப்பட்டது.

சிறப்பு வாய்ந்த கோயிலின் ஒரு பகுதி, தற்போது சுவர் இல்லாமல், திரையிட்டு மூடப்பட்டுள்ளதால், பக்தர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர். அரசு அனுமதி அளித்தால் கட்டளைதாரர்கள் மூலம் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பக்தர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தன நிலம் எவ்வளவு உள்ளது என்பதை, பழைய ஆவணங்களின்படி கணக்கிட்டு, அளவீடு செய்து, மார்க்கிங் செய்து கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வசதியாக இருக்கும், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்காது என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


இதையொட்டி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினா் பெ.ராமலிங்கம், பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் காம்பவுண்ட் அமைப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தர்.

கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, ஒப்புதல் பெற்றபிறகு, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நாமக்கல் சட்டமன்ற உறுப்பினா் பெ.ராமலிங்கம் தெரிவித்தார். 


இந்நநிகழ்வில் நாமக்கல் முனிசிபாலிட்டி நகர்மன்ற தலைவா் கலாநிதி, துணைத் தலைவா் பூபதி, கவுன்சிலர் சரவணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்