Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி  நிறுவனங்களில்  சாதனையாளர் தின விழா  

ஏப்ரல் 13, 2023 04:49

திருச்செங்கோடு, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி  நிறுவனங்களில் சாதனையாளர் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில்  விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர்   கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் துணைத் தாளாளர் கிருபாநிதி இயக்குனர் டாக்டர் நிவேதா கிருபாநிதி  நிர்வாக இயக்குநர் டாக்டர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கல்லூரியின்  வேலை வாய்ப்பு அதிகாரி டாக்டர் சரவணன் ஆண்டு அறிக்கையை வாசித்தர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி  தனது தலைமை உரையில் மாணவிகள்  தங்கள் வாழ்வில் வாய்ப்புகள் என்பது வரம் அந்த  வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி அதை வளமானதாகவும் தெளிவான ஒரு பாதையை அமைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாணவிகள் தங்களது லட்சியத்தையும் இலக்குகளையும் அடையும்வரை எந்தவித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தங்களுடைய லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தொடர்ந்து இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.


 மேலும்  சாதனையாளர்  விழாவில் சிறப்பு விருந்தினராக விப்ரோ நிறுவனத்தின் தேசிய தலைமை அதிகாரி (campus Hiring) டாக்டர் லவணம் ஆம்பல்லா பேசும் போது, மாணவிகள் மனதில் இலட்சியத்தையும் குறிக்கோளை  கொண்டு கனவு காணுங்கள்.

அந்த கனவை நிறைவேற்ற நித்தம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார். சென்னை இன்டர்நேஷனல் மார்க்கெட் குரூப்  சீனியர் ஹெச் ஆர் பிஸ்னஸ் அட்வைசர் செல்வி உமாதேவி ஐயப்பன் பேசும் போது, மாணவிகள் எங்கு பணியாற்றினாலும் எந்த ஒரு செயலை செய்தாலும் அங்கு நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் கொள்ள வேண்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இன்றைய தலைமுறை பெண்கள் பல துறைகளில்  தங்கள் ஆளுமை திறன்களை வெளிப்படுத்தி பல சாதனைகளை செய்து வருகின்றனர்.


 அது போல் நீங்களும் சிறந்து விளங்க வேண்டும்  என்று கூறினார். மேலும் Wipro, TCS, CTS, Amazon,DXC Technology,Sopra steria,Zoho,zifo,Avantor, Dell Technologies, Hexaware   போன்ற 90 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்ளால் நடத்தபட்ட நேர்காணலில் 2574  தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பணி நியனமான ஆணைகளை சிறப்பு விருந்தினர்கள் லவணம் அம்பல ,உமா தேவி ஐயப்பன்  வழங்கினர். 


  இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், ,அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன்,   திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ குமரவேல் மற்றும் துறைத் தலைவர்கள்  பேராசிரியர்கள் மாணவிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்