Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடைகால சிலம்ப பயிற்சி வகுப்புகள் துவக்கம்

ஏப்ரல் 17, 2023 07:26

திருச்செங்கோடு, உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு APJ கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழின் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்  கோடைகால பயிற்சி வகுப்பு அடிமுறை மற்றும் சிலம்ப கலை பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.


அடிமுறை கலை பட்டாசு பட புகழ் இயக்குனர்  பேராசான் செல்வராஜின்  கிளை வகுப்பான அடிமுறை மற்றும் பாரம்பரிய சிலம்பக் கலை பயிற்சி வகுப்புகள் சீத்தாராம்பாளையம் கொள்ளு மேடு சண்முகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்  துவக்கப்பட்டது. 


சிலம்ப மாஸ்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் பயிற்சியாளர் நவீன் குமார் மற்றும் தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் மேலாளர் பாலாஜி ஜெயக்குமார் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தனர், 50 க்கும் மேற்பட்டவர்கள் அடிமுறை மற்றும் சிலம்பப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்