Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில்  ஆர்.எஸ்.எஸ் சார்பாக அணிவகுப்பு   பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஏப்ரல் 17, 2023 07:49

நாமக்கல், நாமக்கல் மாவட்ட  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர். எஸ். எஸ்.) அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி இன்று 16-04-2023 ஞாயிறு (சித்திரை 3)
நடந்தது

நாமக்கல் பூங்கா சாலை அம்மா உணவகம் அருகில் இருந்து இன்று மாலை 
துவங்கிய இந்த அணிவகுப்பு 

நாமக்கல் மாவட்டம்  வள்ளிபுரம், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 
பூசாரி. வி. சடையப்பன்   தலைமையில் துவங்கிய இந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது. 

நாமக்கல் பேருந்து நிலையம்,  மணிக்கூண்டு, திருச்சி சாலை,ஸ்டேட் பேங்க் ரோடு, பிஎஸ்என்எல் சாலை, மோகனூர் சாலை, ஐயப்பன் கோவில் வழியாக பரமத்தி சாலை எம்ஜிஆர் சிலை, காந்தி சிலை, உழவர் சந்தை வழியாக மீண்டும் பூங்கா சாலையை அடைந்தது.

 அம்மா உணவகத்தின் முன்பு நிகழ்ச்சி முடிந்தது அங்கு அணிவகுப்பு மரியாதை செய்து சொற்பொழிவாற்றி நிகழ்ச்சியை முடித்தனர்.

 இந்த ஆர்எஸ்எஸ் அணிவப்பானது நாமக்கல் நகரத்தில் இன்று முக்கிய வீதிகளில் அணிவித்து வந்தது பொதுமக்கள் மத்தியிலே  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆர் எஸ் எஸ்  அணி வகுப்புக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலை செல்வன் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கிஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்