Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரோட்டரி கிளப் ஆப் திருச்செங்கோடு ஹை-டெக் சங்கம் சார்பில் செயற்கைக்கால் வழங்கும் விழா 

ஏப்ரல் 18, 2023 12:01

திருச்செங்கோடு, ரோட்டரி கிளப் ஆப் திருச்செங்கோடு ஹை-டெக் சங்கத்தின் சார்பாக  நடைபெற்ற செயற்கைக்கால் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை ஹை-டெக் ரோட்டரி சங்கத்தின் தலைவர் மகேஷ்  தலைமையேற்று நடத்தினார். இந்த விழாவில் கௌரவ விருந்தினராக தினகரன் நாளிதழ் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் R.  நடேசன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் சன் டிவி நிருபர் இதாயத்துல்லாவிற்கு மதிப்புள்ள செயற்கை கால்  வழங்கப்பட்டது,இந்த விழாவினை திட்ட இயக்குனர் வெங்கடேஸ்வரன்   ஏற்பாடு செய்திருந்தார். சங்கத்தின் தலைவர் மகேஷ் வரவேற்புரை வழங்கினார்.  

கண்ணன்  நன்றியுரை கூறினார். இந்த விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் Rtn ஆடிட்டர் கணேசன், இன்ஜினியர் Rtn அசோக், V. P. ராஜா, மற்றும்  ராஜரத்தினம், சங்கத்தின் மூத்த உறுப்பினர் வெங்கடாசலம், செந்தில்குமார், உறுப்பினர்கள் கேசவன் வள்ளுவன், , பிரவீன் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்