Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

35 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த +2 மாணவர்கள்

ஏப்ரல் 18, 2023 12:07

குமாரபாளையம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1987 88 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் இன்று சந்தித்தார்கள் இவர்கள் 35 ஆண்டுக்கு பிறகு  பள்ளிக்கு வந்து அவர்களின் பள்ளி நினைவுகளை மலரும் நினைவுகளாக நினைவு கூர்ந்தார்கள் மற்றும் இன்றைய சூழ்நிலைகளை பற்றியும் ஒவ்வொருவரும் செய்யும் பணிகள், தொழில்கள் குடும்ப நிலைகள் பற்றி அறிமுகம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் அனைவரையும் இவர்களுடன் பயின்ற திரு. ராஜேந்திரன் அவர்கள்  ஒருங்கிணைத்தார். அந்த காலகட்டத்தில் பயின்ற 70 மாணவர்களில் 55 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் பல்வேறு உதவிகளை  இனிவரும் காலங்களில் செய்து தருவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இவர்களை பள்ளியின் சார்பாக ஆசிரியர்கள் திரு கார்த்தி, ராமச்சந்திரன், சிவகுமார், தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் வரவேற்றார்கள்.

தலைப்புச்செய்திகள்