Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமாரமங்கலத்தில் மரங்கள் கடத்தல்   நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

ஏப்ரல் 22, 2023 05:06

திருச்செங்கோடு, குமாரமங்கலம் இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் இரவோடு இரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 87 கவுண்டம்பாளையம் குமரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் பனைமரம், வேப்பமரம், வாதாணி மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பல வருடங்களாக வளர்ந்து வந்தன.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் சில சமூக விரோத நபர்கள் நூறாண்டு காலமாக இருந்த பனை மரங்கள், வேப்ப மரங்கள், வாதான மரங்களை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் அறுத்து அதனை லாரிகள் மூலம் மூலம் கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட  வருவாய் துறையினருக்கு தகவல் தெரிந்தும் இதனை ஒட்டுமொத்த அலுவலர்களும் மூடி மறைத்துள்ளனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரமங்கலம் கிளையின் சார்பில் மூத்த தோழர் சுந்தரம் தலைமையில் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் செல்லதுரை இடம் புகார் மனு அளித்துள்ளனர் அதில் கூறியுள்ளதாவது:- 

தேசிய மரமான பனை மரத்தை வெட்டி இருப்பது மாபெரும் குற்றமாகும் மேலும் பல்வேறு மரங்களை வெட்டி இரவோடு இரவாக கடத்துவதற்கு துணையாக இருந்த அலுவலர்கள் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.ரமேஷ்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்