Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாலிபர் தற்கொலை- அறுவை சிகிச்சைக்கு பயந்து விபரீத முடிவு

மே 06, 2023 04:36

செங்கல்பட்டு :செங்கல்பட்டுஅருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் அருண்குமார் தினந்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கிட்னி செயல் இழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அருண்குமார் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோர்வுடன் காணப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாலூர் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் கரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்