Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய வலை தள பொறுப்பாளர்கள் : பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து

மே 11, 2023 11:20

தென்காசி:தெற்கு மாவட்ட திமுக சமூக வலை தள பொறுப்பாளர்கள் மாவட்டச்செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் ஒப்புதலுடன், தென்காசி தெற்கு மாவட்ட  வலைதள பொறுப்பாளர்களை, மாநில செயலாளர் ஹெலன்டேவிட்சன் அறிவித்துள்ளார்.  அதன்படி வலை தள பொறுப்பாளர்களாக பண்பொழி ஹபீப்நிஷா, பாவூர்சத்திரம் பிரின்ஸ் ரோஸ் ஷாலிமேரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து புதிய நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்