Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் அடுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

மே 13, 2023 11:41

தென்காசி:மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண் அடுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமையில் ஊத்துமலை கிராமத்தில் வைத்து நடத்தப்பட்டது. 

இம்முகாமின் துவக்கமாக ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள்.

வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் வேளாண் அடுக்குத்திட்டம் ஆனது அனைத்து விவசாயிகளுக்கும் தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கவும் விவசாயிகள் எந்த பயிர்களை எப்பொழுது பயிரிடலாம் எப்படி அதிக மகசூல் பெறலாம் என்பதை குறித்த ஆலோசனை மண் ஆரோக்கியம் மற்றும் பயிர் ஆரோக்கியத்தை கண்காணித்தல் போன்ற விபரங்களை இத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் விவசாயிகள் பெற முடியும். எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல் தொலைபேசி எண் பட்டா நகல் மற்றும் வங்கி விபரம் ஆகிவற்றை ஊத்துமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்திட கேட்டுக் கொண்டார்கள். மேலும் ஊத்துமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து உதவி வேளாண்மை அலுவலகள் பணியினை ஆய்வு செய்தார்கள். 

இம்முகாமில் துணை வேளாண்மை அலுவலர் முருகன் உதவி விதை அலுவலர் மாரியப்பன் உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார் கணேசன் மணிகண்டன் சுமன் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் மாயாண்டி மற்றும் ஊத்துமலை பகுதி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். முகாமின் ஏற்பாட்டினை கண்ணையா கோபால் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்