Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் வாழ்த்து

மே 13, 2023 12:16

தென்காசி:தென்காசி தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனிடம் வாழ்த்து பெற்றனர்.திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஒப்புதலின் பேரிலும்,தென்காசி தெற்கு திமுக அமைப்புச்சாரா ஓட்டுநர் அணியின் புதிய நிர்வாகிகளை மாநில செயலாளர் டி.செங்குட்டுவன் நியமனம் செய்துள்ளார். 
அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட தலைவராக அந்தோணிசாமி, துணைத்தலைவராக மாரியப்பன், அமைப்பாளராக பி.எஸ்.அண்ணாமலை, துணை அமைப்பாளர்களாக ஜெயசிங், அமானுல்லா, குட்டி (எ) சிவராமன், ஜீவானந்தம், திருமலைச்சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து புதிய நிர்வாகிகள் அமைப்பாளர் பி.எஸ்அண்ணாமலை தலைமையில், மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்