Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடை கொண்டாட்டம் நூலைப்படித்து கட்டுரை எழுதுதல்

மே 15, 2023 12:15

தென்காசி:தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் கோடைகொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று இல்லம்தேடி கல்வி.தன்னார்வலர் தனலட்சுமி டிடிடிஏ பள்ளியினை சார்ந்த  ஐந்தாம்கட்டளை,பூலான்குளம்,மாதாபட்டணம் பகுதிகளிலிருந்து 15-க்கு மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். 

பின்பு நூலகத்தில் புத்தகத்தினை 2 மணி நேரம் வாசித்த பின் அப்புத்தகத்தில் படித்தறிந்த கருத்துகளை கட்டுரையாக எழுதி வழங்கினார்கள். இளம் வயதிலேயே புத்தகம் படிக்க தூண்டும் இம்முயற்சி பெற்றோர்கள்,வாசகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்வாக அமைந்தது.கிளை நூலகர் சுந்தர் நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி நிஹ்மதுனிஸா இல்லம் தேடி தன்னார்வலர் ராமலட்சுமி இணைந்து செயல்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்