Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இராமநதி அரசு மீன்பண்ணை

மே 15, 2023 12:59

 

தென்காசி:இராமநதி அணையின் நீர்த்தேக்க வளாகத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய்.5.00 கோடி மதிப்பீட்டில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளுக்கான சினை மீன் வங்கியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலி காட்சி மூலம்  திறந்து வைத்துள்ளார். 
அதனைத்தொடர்ந்து, இந்த பண்ணையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், கடையம் ஒன்றிய பெருந்தலைவர் செல்லம்மாள் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி , புஷ்ரா ஷப்னம், உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருநெல்வேலி , ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர், தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை , பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர், மீன்பிடி திட்ட உபகோட்டம், திருநெல்வேலி ஆகியோர் பங்கேற்றனர். 
இத்திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 1 கோடி நுண்மீன் குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் தரமான சினை மீன் குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

தலைப்புச்செய்திகள்