Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா மதுரை கலெக்டராக நியமனம்

மே 17, 2023 09:04

தென்காசி:தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று படிப்படியாக ஆட்சியர் பதவியை எட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் - சொர்ணம் தம்பதி மகள் சங்கீதா (42). சவுந்தரபாண்டியன் அஞ்சல் துறையில் அக்கவுன்டென்டாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பாளை ஜெயேந்திரா சில்வர் ஜூப்ளி பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை படித்த சங்கீதா, சாராள்தக்கர் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தார். பின்னர் சென்னை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த சங்கீதா, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி உளவியல் படித்தார். பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வில் வெற்றி பெற்ற சங்கீதா திருவண்ணாமலையில் கோட்டாட்சியராக (பயிற்சி) பதவியேற்றார். இதையடுத்து பொன்னேரியில் கோட்டாட்சியராக பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பொறுப்பேற்ற அவர், டாம்ப்கால் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் இணை மேலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மாநில உயர் கல்வித் துறையில் செயலாளராக இருந்த சங்கீதா தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் குடியிருந்து வந்த சங்கீதா தற்போது மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சங்கீதாவுக்கு போனில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்