Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய ராணுவத்தினரின் சீருடையில் விரைவில் மாற்றம்

மே 14, 2019 10:45

புதுடெல்லி: இந்திய ராணுவத்தினர் முன்னதாக காட்டன் துணியால் தைக்கப்பட்ட சீருடைகளை பயன்படுத்தி வந்தனர். பிறகு காட்டன் துணிகளை பராமரிப்பது சிரமமாக இருப்பதால் டெர்ரிகோட் துணியாலான சீருடைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவை கோடை காலத்திலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் பொருந்துவதில்லை என்று கூறப்படுகிறது.

எனவே போர் சூழல் மற்றும்  வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவ உடை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீருடையின் நிறம், சீருடையில் பதவியை குறிக்கும் பட்டைகள் இருக்கும் இடம் உள்ளிட்டவற்றில் சில மாற்றங்கள் வர உள்ளதாக தெரிகிறது. 

தலைப்புச்செய்திகள்