Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகர்மன்ற கூட்டத்தில்பரபரப்பு கதவை அடைத்து உறுப்பினர்கள் தலைவரை சிறைபிடிப்பு

மே 19, 2023 09:51

தென்காசி:செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் வைத்து சாதாரண கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், மேலாளா் ரத்தினம், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் நகர்மன்ற உறுப்பினா்கள் ஜெகன், முத்துப்பாண்டி, வேம்புராஜ், சுடர்ஒளி ஆகியோர் எழுந்து நகர்மன்ற தலைவா் மீது வழக்கு உள்ள நிலையில் அவர் எப்படி கூட்டத்ததை நடத்தலாம் என்றுஆவேசமாக கேள்வி கேட்டு நகர்மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 
இதனையடுத்து உறுப்பினா்களுக்கும் தலைவருக்கும் கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்படுட்டது. இதனையடுத்து தலைவா் கூட்டத்தை விட்டு வெளியேற முயன்றார். ஆனால் உறுப்பினா்கள் அவரை சூழ்ந்து கொண்டு வெளியேற விடாமல் தடுத்து எங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு வெளியே செல்லுங்கள் என காரசார விவாதத்தில் ஈடுபட்டனா்.இந்த நிலையில்  திமுகாவைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தை தனது செல்போன் மூலம் படம்பிடித்து கொண்டிருந்தார். அவரை உறுப்பினா்கள் தடுத்து வெளியே செல்லும்படி சத்தம் போட்டனர்.இதையடுத்து அங்கு காவல் பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த நபரை வெளியேற்றினா். இந்நிலையில் நகர்மன்ற தலைவா் கூட்ட அரங்கின் பின்புற வாசல் வழியாக வெளியே சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாஜக உறுப்பினா்கள் தலைவர் பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினா்.ஆணையாளர் ஜெயப்பிரியாவிடம் சென்று இந்த கூட்டத்தில் உள்ள எந்த தீரமானங்களும் நிறைவேற்ற கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

மேலும் கூட்ட நிகழ்சிகளை  வீடியோ எடுத்தது குறித்து திமுக நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் வலியுறித்தி நகராட்சி மேலாளா் ரத்தினத்திடம் மனு அளித்தனா். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன் வேம்புராஜ், ராம்குமார், செண்பகராஜன், சரஸ்வதி, ராதா, இந்துமதி, ரஹீம், இசக்கித் துரைப்பாண்டியன், பேபி ரெசவுபாத்திமா, மேரி, இசக்கியம்மாள், பினாஷா, முருகையா ஆகியோர் கலந்து கொண்டனா்.நகராட்சிஅலுவலக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்