Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம்

மே 19, 2023 09:55

தென்காசி: தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் தென்காசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் யூனிஃபைடு ஹாக்கி இணைந்து நடத்திய 15 நாள் இலவச சிறப்பு கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் வீரசிகாமணி விவேகானந்தா பள்ளியில் வைத்து 1.5.23 முதல் நடைபெற்று வந்தது.பயிற்சி முகாமில் பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த 15 நாள் பயிற்சி முகாமில் உடல் நலனை மேம்படுத்த காலை மாலை இருவேளையும் பயிற்சியின்போது பால் முட்டை மற்றும் சுண்டல் போன்ற உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன மற்றும் ஹாக்கி சம்பந்தமான ஆலோசனைகள் பயிற்சிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக சங்கரன்கோவில்  ஒன்றிய  கவுன்சிலர் திருமதி வேலுத்தாய் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். யூனிஃபைடு  தென்காசி ஹாக்கி சங்க தலைவர் மற்றும் பள்ளி தாளாளர் முனைவர் கல்யாணி சுந்தரம் அவர்கள் தலைமையில்  யூனி ஃபைடு   தென்காசி ஹாக்கி சங்க செயலாளர் முனைவர் பால் மகேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் ஃபிலிம்ஸ் பயிற்சியாளர்கள் முதன்மை உடற்கல்வி ஆசிரியர் திரு.சரவணன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்