Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் 

மே 20, 2023 10:22

தென்காசி:நுண்ணீர் பாசனம் (Pet droo Imare crop) என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும் திறப்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்ப முறையாகும்.குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய வேண்டியது இன்றைய காய கட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதற்கு பாரதப் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் வழிவகை செய்கிறது.இந்திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்பாட்டுத்திறன் 40%-60% வரை அதிகரிக்கிறது.மகசூல் 30-40% வரை அதிகரிக்கிறது. 

இத்தொழில்நுட்பம் மூலம் உரங்களையும் பாசன நீர்வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்துவதால் உரப்பயன்பாடு 40% வரை அதிகரிக்கிறது. இதனால் பாசன நீர் சிக்கனமாக பயன்படுவதோடு உரங்களும் வீணாகாமல் தேவைக்கேற்றாற்போல் பயன்படுத்தப் படுகிறது.களைகளின்வளர்ச்சி கட்டுப்படுத்த படுவதால் பண்ணையாட்கள் தேவை குறைகிறது.நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துவான் பாசனம் போன்ற வெவ்வேறு வகையான பாசன அமைப்புகள் உள்ளன.இவ்வனைத்து அமைப்புகளுக்கும் ஒரே மாதிரியான மானிய முறையே பின்பற்றப்படுகிறது. 
சிறு, குறு விவசாமிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்படுகிறது. 

75% சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத்தொகையை வங்கி வரைவோலையாக தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீர் பாசன நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா நகல்,ஆதார் அட்டை, நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, நிலவரைபடம் பற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சார்பித்து பயன்பெறலாம். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த ஆண்டு 40 பஞ்சாயத்து கிராமங்கள் அரசாங்கந்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 30 சதவீத இடஒதுக்கீடு இக்கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும், மேற்கூரிய அனைத்து திட்ட இனங்களும் 80% பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20% ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் வழங்கப்படும். பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30% திட்ட இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு (2023-24) தென்காசி மாவட்டத்திற்கு 1500 ஹெக்டேர் நுண்ணி பாசனம் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இதில் அதிக நிலத்தடி நீர் உபயோகப் படுத்தப்பட்டு குறைவான நீர்மட்டம் உடைய குறுவட்டத்திற்கு 1250 ஹெக்டேரும் மற்றும் பாதுகாக்கப்பட்ட குறுவட்டத்திற்கு 250 ஹெக்டேரும் நிலந்தடி நீரின் இருப்பிற் கேற்பவே இலக்கீடு பெறப்பட்டுள்ளது. 

தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்களை உதவி இயக்குர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் அல்லது MIMIS வலைதளத்தின் மூலமாக, நேடியாக பதிவு செய்தும் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தலைப்புச்செய்திகள்