Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக இசை பயிற்சி ஆசிரியை செண்பகவல்லிக்கு பாராட்டு விழா  

மே 21, 2023 10:06

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதி சிவந்தி வாசலில் இந்திரா நகர் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வந்தது.  இந்தப் பள்ளியில் 1981 முதல் 1985 வரை ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி மேல ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.  அப்போது இந்த பள்ளியில் படித்த செண்பகவல்லி என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி செண்பகவல்லி சென்னை குரோம்பேட்டையில் கர்நாடக இசை பள்ளி நடத்தி வருகிறார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் இசைப் பயிற்சியும், ஆன்லைன் மூலம் வெளிமாநில,  வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார்.  இவரின் சேவையை பாராட்டி 2021 - 22ம் ஆண்டுக்கான கர்நாடக இசைப் பயிற்சி ஆசிரியருக்கான விருதினை ஜனாதிபதி திரௌபதி திர்மு வழங்கினார். 38 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பழைய மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு வரும்போது கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கர்நாடக இசை பயிற்சி ஆசிரியை செண்பகவல்லிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பட்ட முத்து, பத்மநாதன், அருணகிரி, கோதை, மற்றும் அரசு பள்ளி மாணவர்களான சேகர் பாண்டியன், கவுரி நாராயன், சங்கர பாண்டியன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்