Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதாரத்துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு முகாம்

மே 23, 2023 08:03

திருநெல்வேலி: அம்பை வட்டாரம் அகஸ்தியர் பட்டியில் வைத்து திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் மருத்துவர் ராஜேந்திரன் அறிவுறுத்தல் பேரில் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி தலைமையிலான மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகர் மருத்துவர் சுப்புலட்சுமி மனநிலை ஆலோசகர் சாரதா, சமூகப் பணியாளர் டேவிட் ஆகியோர் கொண்ட  குழுவினர் சிவந்திபுரம் பஞ்சாயத்து உட்பட்ட அகஸ்தியர் பட்டியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு புகையிலை மூலமாக ஏற்படும் நோய்கள் குறித்தும்  அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுக்க வேண்டிய நடைமுறைகளை பற்றியும் விளக்கமாக பேசினார். 
மேலும் புகையிலை பழக்கம் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனநல ஆலோசனைகள் பெறுவது சம்பந்தமாகவும் சிகிச்சைகள் எடுப்பது குறித்தும் விரிவாக எடுத்துப் பேசினார். மேலும் அப்பகுதியில் உள்ள பலசரக்கடைகள் புகையிலை தொடர்பான ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ்,விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வைராவி குளம் வட்டார மருத்துவ அலுவலர் பிரவீன் குமார், அகஸ்தியர் பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரியப்பன், மருத்துவமில்லா  மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, திருப்பதி, மணிகண்டன், ஆனந்த், ஜெய ஆனந்த் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்