Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை

மே 23, 2023 08:05

தென்காசி: ஊதிய உயர்வு, அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூபாய் 50,000 வழங்க UGC அறிவுறுத்தியுள்ளது. எங்களுக்கு தற்போது ஊதியம் ரூபாய் 20,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூபாய் 30,000 வழங்க எடுத்த நடவடிக்கை ஓராண்டிற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம்.

பணி நிரந்தரம் ,கௌரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்வதற்கான நடைமுறைகள் 2010ல் தொடங்கப்பட்டது இதற்கு நீதிமன்றம் அனுமதியும் ஒப்புதலும் வழங்கி உள்ளது. ஆட்சி மாறியதும் அதிகாரிகள் இச்சிறப்பு தேர்வினை நிறுத்த அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர்.
இதனை மாண்புமிகு தமிழக முதல்வர்,மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு உடனடியாக கௌரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்திட வேண்டுகிறோம்.

காப்பீடு ,நாங்கள் தற்காலிக பணியாளர்களுக்கான எவ்வித பலன்களையும் பெறாமல் கல்லூரிகளில் பணி செய்து வருகிறோம்.எதிர்பாராத விபத்து உடல் நலக்குறைவு காரணமாக ஆண்டுதோறும் சிலர் இறந்து விடுகின்றனர். இதனால் குறைவான ஊதியம் பெற்று வரும் கௌரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் மிகப்பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க கௌரவ விரிவுரையாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதி (EPF) கௌரவ விரிவுரையாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி(EPF)பிடித்தம் செய்திட வேண்டும்.ஏற்கனவே 41 உறுப்பு கல்லூரிகளில் நடைமுறையில் இருந்து வருகின்ற EPFஅரசு கல்லூரியாக மாற்றம் செய்த பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனை அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் தொடர்ந்து செயல்முறைபடுத்த வேண்டும்.

ஊதியம், 12 மாதங்கள் பணி செய்தாலும் 11 மாதங்கள் மட்டும் ஊதியம் எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.வருடத்தில் ஒரு மாதம் மட்டும் நாங்கள் வேறு எங்கு வேலைக்கு செல்ல முடியும். எனவே எங்களுக்கு 12 மாதமும் ஊதியம் வழங்கிட வேண்டும்.என பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அரசிடம் முன் வைத்தது.

தலைப்புச்செய்திகள்