Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீ.கே.புதூரில் ரூ.8 லட்சத்தில் சாலைப்பணி யூனியன் சேர்மன் காவேரி ஆய்வு

மே 24, 2023 08:16

பாவூர்சத்திரம்:வீ.கே.புதூரில் ரூ.8 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை பணியை யூனியன் சேர்மர் சீ.காவேரி, சீனித்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழப்பாவூர் ஒன்றியம், வீ.கே.புதூர் பள்ளிக்கூடத்தெருவில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், ஒன்றிய கவுன்சிலர் ஹேமா சரவணன் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை யூனியன் சேர்மன் சீ.காவேரி, சீனித்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, ஒன்றிய கவுன்சிலர் ஹேமாசரவணன், ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரபேச்சிமுத்து, திமுக செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி விஜயன், ஊராட்சி துணைத்தலைவர் வேல்ராஜ், செயலாளர்கள் மணி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்