Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடையம்பெரும்பத்து ஊராட்சியில் நிலமற்ற 7 பேருக்கு இலவச பட்டா 

மே 25, 2023 09:25

தென்காசி: கடையம்பெரும்பத்து ஊராட்சியைச் சேர்ந்த நிலமற்ற 7 பேருக்கு முதற்கட்டமாக இலவச பட்டாக்களை பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.கடையம் ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சி பகுதியை சேர்ந்த நிலமற்றவர்களுக்கு இலவச பட்டா  வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவத்திடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து அவரது முயற்சியின் பேரில் முதற்கட்டமாக இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா தலைமை வகித்து,  சபரிநகர், மேட்டூர், ஸ்டாலின் நகர், கானாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிலமற்ற 7 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார்.  அவர்களுக்கு ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் அரிகரன் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகி பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்