Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரன்கோவிலில் பாஜக நகர செயற்குழு கூட்டம்  

மே 29, 2023 09:33

தென்காசி: சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு நகர தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜலட்சுமி, நகர பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட பாஜக  தலைவர் ராஜேஸ் ராஜா, முன்னாள் மாவட்டத்தலைவர் தீனதயாளன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் அந்தோணி ராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ் தேவந்திரன், மாவட்ட பிரச்சார பிரிவு துணை செயலாளர் ரவி பாண்டியன், நகர மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி,  மாவட்ட விளையாட்டு பிரிவு செயலாளர் பிரதீப்,  நகர கல்வியாளர் பிரிவு தலைவர் மாணிக்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர தலைவர் சங்கர் ராஜ், நகர செயலாளர் சுப்பிரமணியன், நகர அணி பிரிவு தலைவர்கள், நகர செயற்குழு உறுப்பினர்கள் மற்றும்  கிளை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்