Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஒப்படைப்பு

மே 29, 2023 09:35

தென்காசி: கீழப்பாவூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் தொகுதி பார்வையாளர் சுரேஷ் ராஜனிடம், பேரூர் செயலாளர் ஜெகதீசன் ஒப்படைத்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல், பொ.சிவபத்மநாதன் அறிவுறுத்தலின் பேரில், கீழப்பாவூர் பேரூர் பகுதியில், திமுக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்றது. புதிதாக சேர்த்த உறுப்பினர் படிவங்களை கீழப்பாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொகுதி பார்வையாளர் சுரேஷ்ராஜனிடம், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில், பேரூர் செயலாளர் ஜெகதீசன் ஒப்படைத்தார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக உறுப்பினர் சேர்த்தமைக்காக பேரூர் செயலாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்