Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 நூற்றாண்டு விழாவையொட்டி நல உதவிகள் 

ஜுன் 01, 2023 11:52

பாவூர்சத்திரம்: மகிழ்வண்ணநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சார்பில் நல உதவிகளை மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார். கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன் தலைமை வகித்தார். பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணிஅந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதியும், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கவுன்சிலருமான சீ.பொன்செல்வன் தொகுப்புரை ஆற்றினார். 
மேலும் பொருள்செல்வன் வரவேற்று பேசினார். அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, 250 பேருக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஜெகதீசன், ஜெயக்குமார், சத்தியராஜ், தங்கேஸ்வரன், இசக்கிராஜ், காங்கிரஸ் நிர்வாகி ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி ஆல்பின்ராய் நன்றி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்